Friday, September 12, 2008

எளியரே...


இந்த இணைய தளத்தைத் தொடங்கிய முதல், ஒரு முறைக் கூட என்தாய்மொழியாகிய தமிழில் நான் எழுதவில்லை... தமிழேன்னைத் திட்டியது: துரோகிஎன்றது. நான் எழுதத் துவங்கியது தமிழில் தானே! என்னைஏமாற்றுக்காரன் என்றாள் தமிழ்த் தாய்.

அதனாலும், தந்தை பெரியார் மீது நான் கொண்ட அளவுக்கடந்தப் பற்றாலும் நான்எழுதுகிறேன், என் முதல் தமிழ் கவிதையை... தமிழாயிருந்தாலும், என்தனித்துவம் சிறக்குமென நினைக்கிறேன். பின் எல்லாம் உங்கள் விமர்சனம்: அதற்க்கு முன், இது என் எண்ணம்...

வண்ணமில்லாமல்...

எளியர்

முரண்பாட்டுக் குவியல், நேர்மாற்றுக்
களஞ்சியமாம்
இப்பூவுலகம் - அதில்
கண்கட்டப்பட்ட
மனிதன் வாழும்,
இயந்திரப்படுதப்
பட்டதோர் வாழ்க்கை...
கடுங்குவிய
லிலும் நான் கண்டேனொரு மென்மை:
கண்டு
மெய்ச்சிலிரத்தக்
கையளவு
உண்மை;

முரண்பாட்டு
மூட்டைக்குத் தானாகப்
போடப்பட்ட
முடிச்சினை நானாக
அவிழ்த்து
சேர்க்கிறேன்,
அவ்வழகியச்
சில்லறையை...

ஆனால்
நிறைந்தச் சோற்றுப்பானைக்குக்
கூடுதல்
பருக்கையல்ல இந்நாயம்;
வயிறு
வாடிய பிள்ளைப்பயிற்றின்
அரியதோர்
பெரும் பொக்கிஷம்;
பசிஎன்னும்
கடும் புண்ணுக்குச்
சுக
நிவாரணம்: வன்மையுடன்...

நாணயச்
சின்னத்தின் மேல் கறைப் படியுமோ?
எந்நாளும்
பொன் நாணயம் மாசுருமோ?
வாழ்க்கை முரண்பட்டாலும்,
நாணயம் பலியாகுமோ?
"பதில் தெரிந்ததே கேட்கிறாயோ?"
என்பார் அம்மனிதன்...

மனிதர்களிடையில் அவர்
என்ன வேறோ?
இல்லை அம்மனிதன் தான்
அவர் பிரானென்று சொன்னாரோ?
மற்ற சுயனலவாதிகளைப் போல்,
மற்ற 'மகாத்மா'க்களைப்போல்?
தன்னைத்தான் புகழ்ந்தாரோ?
இல்லை அம்மனிதருக்கு
அந்த அவசியம் தான் உண்டோ?
வேறு என்ன சொன்னார்?

அவர் புகழையா?
இனப் புகழையா?
மதப்புகழையா?
இல்லை... மனிதப்புகழை!
நாமும் சொல்வோம்,
மனிதரினமவரால் பெற்ற
மதிப்பற்றப்புகழை...
நாம் சொல்வோம்!

உருவெடுத்து, நம்புவியாளப் பிறந்த மனித தெய்வம் ஒன்றே,
அறம்
சாய,
தருமம்
சாய,
சமத்துவம்
சாய,
தான்
சாயாமல்,
முரசெடுத்தொலித்து
,
மார்புத்
தட்டி,
வேங்கைக்குரலேழுப்பியதாம்
:
உலகில்
கடவுள் இல்லையென...!!!


பாடுவோம்
இவர் புகழை!
முரண்பட்டால் இவர் மனிதரில்லையோ?
இல்லையென்றால் இவர் பிரானோ?
இல்லை முரண்பாட்டு மனிதர் தானோ?
தன்னடக்கம் கொண்டவரோ?
(ஒற்றுக்கொள்ளமாட்டான்,
இவர் பேச்சைக்கேட்ட எவனுமிதற்கு!)

இல்லவே
இல்லை...
இவரே
மனிதர்,
இவரே
அன்பர்,
இவரே
எளியர்,

..............................

இவர்
தான் பெரியார்!!!


இவருக்குப் பின் யார்???

No comments: